இந்திய சினிமா உலகில் தற்போது பரபரப்பாக பேசப்படும் இளம் நட்சத்திரங்களில் முன்னணியில் உள்ளவர் ஜான்வி கபூர். பாலிவுட் மூலமாக தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய அவர், தற்போது தென்னிந்திய சினிமாவிலும் தன் பாதையை விரிவுபடுத்தி வருகின்றார்.
இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்ட வாழ்த்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜான்வி கபூர் தற்போது தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார்.
அத்தகைய நடிகை முதல்முறையாக தேவரா என்ற தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்தார். இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதை தவிர, பிரபல தமிழ் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கும் ஒரு பிரமாண்டமான வெப் சீரிஸிலும் ஜான்வி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த வெப் சீரிஸ் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜான்வி கபூர் தனது ரசிகர்களுக்காக ஒரு சிறப்பான செயலை செய்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!" எனக் கூறியதுடன் அழகிய புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். அதில் ஜான்வி மிகவும் அழகாவும் ஸ்டைலாகவும் காணப்பட்டார்.
Listen News!