• Jan 18 2025

பிக் பாஸ் வர்ஷினி அறிக்கையுடன் வெளியிட்ட முதல் வீடியோ.. என்ன இப்படி சொல்லிட்டாங்க...

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தவர் தான் வர்ஷினி  வெங்கட். குறைந்த அளவான வாக்குகளை பெற்று இறுதியாக நடைபெற்ற எலிமினேஷனில் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வெளியேறிய போட்டியாளர்களுள் மிகவும் நேர்மறையான எண்ணத்துடன் வெளியேறியவர் என்ற பாராட்டுக்களை வர்ஷினி  பெற்றுள்ளார். அதற்குக் காரணம் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர்கள், சக போட்டியாளர்கள் பற்றிய  அவதூறுகளை தான் பேசி விட்டு சென்றார்கள்.

ஆனால் வர்ஷினி வெளியேறும் போது தன்னுடைய சக போட்டியாளர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலேயே அவர் பேசியதோடு அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து சென்றிருந்தார். இதனால் அவர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார்.

d_i_a

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வர்ஷினி நேற்றைய தினம் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு  உள்ளதோடு தனக்கு ஆதரவு அளித்த அத்தனை பேருக்கும் நன்றி என அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.


அதன்படி அவர் குறித்த வீடியோவில், பிக் பாஸ் பயணம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. பிக் பாஸ் மேடையில் பேச நேரமில்லை என்பதால் வீடியோவில் பேசுகின்றேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. உங்களால் பிக் பாஸ் வீட்டில் ஒரு வாரம் தப்பித்தேன். என்னுடைய பயணம் குறுகியதாக இருந்தாலும் உண்மையானதாக உள்ளது.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போட்டியாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. ஒவ்வொருவரும் ஒரு குடும்பமாக நினைக்க வைத்தனர். இந்த வாய்ப்பு மறுமுறை கிடைக்காதா என்ற எண்ணமும் உள்ளது. திரும்பி பிக் பாஸ் வீட்டுக்கு சென்று வாழ்ந்து விட மாட்டோமா என நினைக்கின்றேன் என கூறியுள்ளார். 

மேலும் இது ஒரு நல்ல அனுபவம்.  நல்ல கனவில் இருந்து வந்ததைப் போல உள்ளது. நான் பலருக்கு நல்ல ஆன்மாவாக தெரிந்துள்ளேன் அதுவே எனக்கு மகிழ்ச்சி என வர்ஷினி குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement