• Jan 18 2025

சமந்தாவுக்கு சிறை தண்டனையா? ஒரு போட்டோவால வந்த வினை! வலுக்கும் கண்டனம்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் தனது கேரியரை ஆரம்பித்த சமந்தா, அதற்குப் பிறகு முன்னணி நட்சத்திரங்களோடு நடித்து புகழின் உச்சிக்கே சென்றார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் கொடிகட்டி பறந்த சமந்தா, தற்போது பாலிவுட் பக்கமும் கால் பதித்துள்ளார். இவரது வாழ்க்கையில் சினிமா துறையை விட சொந்த வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார்.

நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, ஒரு சில ஆண்டுகளிலேயே அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் விவாகரத்து பெற்றார். அதன் பிறகு சமந்தாவுக்கு ஏற்பட்ட தோல் வியாதியின் காரணமாக தற்போது வரையில் அதற்காக ட்ரீட்மெண்ட் எடுத்து வருகின்றார்.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு நெபுலைசர் கருவியை தனது மூக்கில் வைத்தவாறு ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார் நடிகை சமந்தா. அத்துடன் பொதுவான வைரலுக்கு மருந்து கொள்ளும் முன் ஒரு மாற்று வழியை முயற்சித்துப் பாருங்கள் எனவும் பதிவிட்டு இருந்தார்.

அதில் ஒரு வழி ஹைட்ரஜன் பெராக்ஸைட் மற்றது காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்வது என குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில், நடிகை சமந்தாவின் இந்த பதிவிற்கு கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், லிவர் டாக் என்ற பெயர் கொண்ட மருத்துவர் ஒருவர் அவருக்கு கண்டன பதிவு போட்டுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், சுவாச வைரஸ் தொற்றுகளை தடுக்கவும் சிகிச்சை அளிக்கவும் ஹைட்ரஜன் பெராக்ஸைட் சுவாசிக்கும்படி சமந்தா பதிவிட்டுள்ளார். அமெரிக்கா ஆஸ்துமா மற்றும் அலர்ஜி அறக்கட்டளை நிறுவனம் ஹைட்ரஜன் பெராக்சைடை நெபுலைஸ் செய்ய வேண்டாம் எச்சரித்துள்ளது. ஏனெனில் அது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. 

மேலும், பகுத்தறிவு மற்றும் விஞ்ஞான ரீதியான ஒரு முற்போக்கான சமூகத்தில் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் இந்தப் பெண்ணுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்க வேண்டும். அவருக்கு உதவியோ அல்லது அவரது குழுவில் சிறந்த ஆலோசகரோ தேவை என கண்டன பதிவு போட்டுள்ளார் குறித்த வைத்தியர். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement