• Jan 19 2025

நிகிதாவோட செருப்பை திருடிருக்கேன்.. லவ் டுடே இவானா: என்னை டார்லிங்னு தான் கூப்புடுவாரு.. தீனா பேட்டி

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

முன்னணி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாக உள்ள காமெடி திரைப்படம் "கள்வன்" ஆகும். இதை விளம்பர படுத்தும் விதமாக தீனா மற்றும் இவானா இணைந்து கொடுத்த பேட்டி ஒன்றில் ஒன்றில் பல சுவாரசியமான விடயங்களை பகிர்ந்துள்ளனர்.

pv ஷங்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் , தீனா , இவானா , பாரதிராஜா என பலர் இணைந்து நடிக்கும் கிராமத்து கதைக்களத்தை கொண்ட காமெடி திரைப்படமே "கள்வன்" ஆகும். கிராமத்தில் உள்ள இரு திருடர்கள் ஊருக்குள் செய்யும் அட்டகாசங்களை நகைச்சுவையாக காட்டுவதாக இந்த கதை நகர்கின்றது. குறித்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 4 ஆம் திகதி வெளியாகும் என்று ட்ரைலர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையிலேயே படத்தை விளம்பர படுத்தும் வேலையில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

அவ்வாறே குறித்த படத்தில் காட்டுயானை ஒன்று முக்கிய பகுதி வகிப்பதால்  போலி யானை ஒன்றில் கள்வன் போஸ்டர்களை ஒட்டி ஊர்வலமாக வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தனர். தொடர்ந்து பல  பேட்டிகளையும் கொடுத்து வரும் இவர்கள் சமீபத்தில் ஒரு கலந்துரையாடலில் இவானாவிடம் "நீங்கள் லவ் டுடே படத்தில் ஏதாவது திருடி இருக்கிறீர்களா? " என்று கேட்டதற்க்கு  "ஆம் நான் நிக்கிதாவின் செருப்பை எடுத்து வந்துள்ளேன்" என்று நகைச்சுவையாக கூறியுள்ளார். 

தொடர்ந்து தீனா, ஜிவி பிரகாஷை பற்றி கூறுகையில் "அவர் எனக்கு ஒரு நண்பர் மாதிரி ஆகிவிட்டார். அவர் என்னை டார்லிங் என்றே கூப்பிடுவார் "என்றும் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement