• Jan 19 2025

பிக்பாஸ் ஷிவானிக்கு விரைவில் டும் டும் டும்? மாப்பிள்ளை யார் தெரியுமா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

 பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணனுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.  

பகல் நிலவு, சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ராஜா உள்ளிட்ட சீரியல் நடித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில்  கலந்து கொண்டார் என்பதும் கிட்டத்தட்ட 98 நாட்கள் வரை அவர் தாக்குப்பிடித்து அதில் விளையாடினார். இருப்பினும் பாலாஜி உடன் அவர் கொண்ட கெமிஸ்ட்ரி காரணமாகத்தான் அவருக்கு மக்கள் மத்தியில் நெகட்டிவ் இமேஜ் கிடைத்தது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ’விக்ரம்’ ’வீட்டில் விசேஷம்’ ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஷிவானி நாராயணன் இப்போதும் ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷிவானி நாராயணனுக்கு தீவிரமாக அவருடைய குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் அனேகமாக தொழிலதிபர் தான் அவருக்கு மாப்பிள்ளையாக வருவார் என்றும் கூறப்படுகிறது . இருப்பினும் இந்த தகவலை ஷிவானி நாராயணன் குடும்பத்தினர் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement