• Apr 01 2025

விஜய் டிவியின் 5 பொன்னான வாய்ப்புகளை நிராகரித்த சீரியல் நடிகர்! ஏன் தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சிகளில் பொதுவாக சின்னத்திரை தொலைக்காட்சிகள் தங்களது டிஆர்பியை தக்க வைத்துக் கொள்வதற்காக பல யுக்திகளை கையாண்டு வருகிறது.

புதுப் புது சீரியல்களை தங்களது சேனலில் இறக்கி டிஆர்பியை எகிற செய்து  வருகிறார்கள். இதில் முதன்மையில் இருப்பது எப்போதுமே சன் டிவி மற்றும் விஜய் டிவி தான். இந்த இரு தொலைக்காட்சிகள் இடையே தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. 

விஜய் டிவி தனது சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ மூலம் டிஆர்பியை அதிகப்படுத்தி வருகிறது. அத்துடன் இதில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டார் 2 ஆகிய சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது.


இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கதாபாத்திரத்தில் நடிக்க வந்த வாய்ப்பு, பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியல் கதிர் வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்பு என கிட்டத்தட்ட ஐந்து விஜய் டிவி சீரியல் வாய்ப்புகளை பிரபல நடிகர் ஒருவர் நிராகரித்துள்ளாராம்.


அதாவது, தற்போது சின்ன மருமகள் சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் நவீன் தான் அந்த வாய்ப்புகளை தவற விட்டுள்ளாராம்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியல் மூலம் பாப்புலரான இவர், கிராமத்து கதைக்காக தான் இந்த சீரியல் வாய்ப்புகளை நிராகரித்ததாக தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement