• Jan 19 2025

அது என் ஸ்கிரிப்ட் இல்லை.. என்னை மன்னிசுடுங்க! கமல் ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட புகழ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கம்ப்யூட்டர் சர்வீஸ்மேனாக தனது பயணத்தை தொடங்கியவர் புகழ்.  இவர் அதே விஜய் டிவியிலேயே குக்கு வித் கோமாளி மூலம்  புகழ் பெற்றார். அவர் மிமிக்ரி மற்றும் நகைச்சுவைக்கு பெயர் பெற்றவர்.

அவரது முழுப்பெயர் புகழேந்தி. ஆனாலும் பொதுவாக புகழ் என்று செல்லமாக  அழைக்கப்படுவார். இவர் ஒரு இந்திய நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். 

தமிழ் சினிமாவில் தீனாவுடன் சிரிப்பு டா படத்தில் நடித்தார் . பின்னர் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட கலக்க போவது யாரு படத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து குக் வித் கோமாளியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது . 


சமீபத்தில் மிகவும் விறுவிறுப்பாக விஜய் டிவியில் ஓடி கொண்டிருக்கும் பிரபல நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 7.

பிரபல நிகழ்ச்சி ஒன்றில் பிக் பாஸ் பற்றி பேசிய புகழ், ரொம்ப பேசப்படும் ஒரு நபராகவும் பிசியான நபராகவும் இருப்பது கமல்ஹாசன் தான். அவரை போல பேசலாம் என்று குரோஸியிடம்  சொல்லி இருவரும் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளரான மாயாவையும், உலக நாயகன்  கமல்ஹாசனையும் பற்றி  நடு மேடையில் வைத்து பயங்கரமாக கலாய்த்து இருந்தனர் . இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பயங்கரமாக பரவலடைந்தது . 


இந்த நிலையில், உலக நாயகன் கமல்ஹாசனை பொதுவில் வைத்து கலாய்த்த காரணத்தின் அடிப்படையில், தற்போது மனம் நொந்து போன புகழ் கமல் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் . 

அதன்படி அவர் கூறுகையில், "கமல் சார் ரசிகர்களுக்கு வணக்கம். கடந்த 2 மாதங்களுக்கு முன் டுபாயில் ஒரு ஷோ நடந்தது . அவங்க கொடுத்த ஸ்கிரிப்ட் ல ஒரு சில வார்த்தைகள் கமல் சார்ரின் ரசிகர்களை பாதித்து இருக்கு அதுக்கு உண்மையிலேயே நான் மன்னிப்பு கேக்கிறேன் . என்று கண் கலங்கியவாறு புகழ் தெரிவித்து இருக்கின்றார் . 

மேலும், நான் அந்த மாதிரி பண்ணினது இல்லை . உங்களுக்கு வருத்தமா இருந்தால் என்னைய மன்னிச்சிருங்க . இனி மேல் எந்த ஷோலையும் நான் இப்பிடி பண்ண மாட்டேன் என்று ரொம்பவும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு இருந்தார்.


Advertisement

Advertisement