• Jan 18 2025

கனமழை பொழிகிறது கவனமா இருங்க... உள்ளே இருந்தாலும் வெளியே மக்கள் நினைப்பாக இருக்கு... BIGG BOSS போட்டியாளர்கள் சென்னை மக்களுக்கு விடுத்த தகவல்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சென்னையில் தற்போது மிக்சாங் சூறாவளி மற்றும் கனமழையால் அநேகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் பல பிரபலங்களும் இந்த மழையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் அறிவுறுத்தல் கூறும் வகையில் பல பிரபலங்களும் வீடியோ மற்றும் புகைப்படங்களையும் அதனுடன் மெசேஜ்களையும் பதிவிடுகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களும் தங்களுடைய தகவலை பகிர்ந்து இருக்கிறார்கள். 


விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபற்றிய தினேஷ், கூல் சுரேஷ், அர்ச்சனா, விசித்ரா,மணி , விஷ்ணு, மாயா என அனைவரும் கேமரா முன் வந்து சென்னை மக்களுக்காக தகவல் ஒன்றை கூறியுள்ளார்கள். 


அதில் தினேஷ் "வேலைக்கு போகும் போதும் சரி வீட்டுக்கு வரும் போதும் சரி கவனமா போயிட்டு வாங்க, அங்க அங்க மரங்கள் விழுந்து இருக்கும், வயர் எல்லாம் கட்டாகி இருக்கும். இரவு நேரம் வெளிய போகாதீங்க , நிறைய தண்ணி தேங்கி நிக்கும் கவனமாயிருங்க, எங்களுக்காக உழைக்குற நீங்களும் கவனமா இருக்கணும், நாங்க இங்க இருந்தாலும் எங்களுக்கு வெளிய நினைப்பாகத்தான் இருக்கு. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்ங்க, உங்களுக்காக நாங்க கடவுள் கிட்ட வேண்டி கொள்கிறோம் என தங்களது தகவலை பகிர்ந்துள்ளனர். 

   

Advertisement

Advertisement