• Jan 18 2025

வெளில வரட்டும் பார்த்துக்கலாம், விஷ்ணுவுக்கு மிரட்டல் விடுத்த மாயா- கமல்ஹாசனை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது எந்த சீசனிலும் இல்லாத பல டுவிஸ்டுகளுடன் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றது.ஸ்மோல் ஹவுஸ் பிக்பாஸ் ஹவுஸ் என இரண்டு வீடுகள் இருப்பதால் ஹவுஸமேட்ஸிற்கிடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியிலிருந்து இறுதியாக ஜோவிகா வெளியேறினார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபல்யமானவர் தான் மாயா.இவர் இதற்கு முதல் கமல்ஹாசனின் விக்ரம் ,விஜய்யின் லியோ ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

மேலும் ப்ரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்ததால் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர். அத்தோடு கமலும் வாரா வாரம் பல இடங்களில் ரூல்ஸை மீறும் மாயாவை ஒரு வார்த்தை கூட கேட்பது இல்லை.இது ரசிகர்களிடையே கடும் கோபத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.


இந்நிலையில் மாயா பூர்ணிமாவிடம் நான் வெளியே போய் என்ன செய்றேன் பாரு என விஷ்ணுவை காட்டி சொல்ல, பூர்ணிமா ஷாக் ஆகி என்ன என கேட்க, உடனே மாயா சுதாரித்துகொண்டு சும்மா பேச போறேன் என்று சமாளித்துள்ளார். 

இதைப்பார்த்த ரசிகர்கள் இதுபோன்று மாயா பேசும் இந்த விஷயத்தையாவது கமல்ஹாசன் கேள்வி கேட்பாரா, இல்லை வழக்கம் போல் கேட்கவே மாட்டாரா என ரசிகர்கள் கமெணட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement