• Feb 23 2025

நன்றி கெட்டத்தனமாக பேசலாமா?- ஒரே ஒரு பதிவால் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டும் விஜே ரம்யா- இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

மாடலிங் துறையில் இருந்து சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகியவர் தான் விஜே ரம்யா.அதன்படி விஜய் டிவி மற்றும் சன்டிவியில் ஏராளமான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டார்.இவர் தற்பொழுது திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

அதன்படி ராதாமோகன் இயக்கிய மொழி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ரம்யா, வனமகன், மாஸ்டர், சங்கத்தலைவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.மேலும் உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகிய விடயங்களில் ஈடுபடுவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆக்டீவாக இருந்து வருகின்றார்.


அதன்படி அண்மையில் விமானநிலையத்தில் எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டு  "என்னுடைய முதல் தாய் வீடு என்னை கைவிட்டுவிட்டது. என்னுடைய இரண்டாவது தாய்வீடான தெலங்கானா என்னை காப்பாற்றியிருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.

 இதனை பார்த்த ரசிகர்கள் பலரையும் வாழ வைத்த, வாழ வைத்துக்கொண்டிருக்கும் சென்னை மிக்ஜாம் புயலால் நிலைகுலைந்து போயிருக்கிறது. எப்படி மீள்வது என்று தெரியாமல் மக்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் சென்னை தன்னை கைவிட்டதாக ரம்யா பதிவு போட்டிருப்பது அவரது நன்றி மறவாமையை காண்பிக்கிறது.


இப்போது வேண்டுமானால் அவரை தெலங்கானா காப்பாற்றலாம். ஆனால் சென்னைதான் அவருக்கு அடையாளத்தை கொடுத்தது. மீண்டும் சென்னைக்குத்தானே நீங்கள் திரும்பி வரணும் என கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement