• Jan 18 2025

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் இது தான் நடக்கப்போகின்றதா?- ராதிகா கொடுத்த சூப்பர் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சின்னத்திரையில் பாக்கியலட்சுமி, சீதாராமன் ஆகிய தொடர்களில் மாஸ் காட்டி வருகிறார். குறிப்பாக பாக்கியலட்சுமி சீரியல் இவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. 


அர்பன் கேட்டகரியில் தொடர்ந்து முதலிடத்தை இந்தத் தொடர் பிடித்துவரும் சூழலில், முதன்மை கேரக்டரில் நடித்துவரும் ரேஷ்மாவிற்கு மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. இந்த சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் நாயகன் கோபியின் இரண்டாவது மனைவியாக நடித்துவருகிறார் ரேஷ்மா.


மேலும் சீரியலின் கதைப்படி பாக்கியா வீட்டில் கோபியும் ராதிகாவும் இருக்கின்றனர்.இதனால் கோபி அடிக்கடி பாக்கியாவையும் பழனிச்சாமிளையும் சேர்த்து வைத்து பேசி வருகின்றார். இதனால் ராதிகா பாக்கியாவிற்கே சர்ப்போட் பண்ணி பேசுவது பார்வையாளர்களுக்கும் பிடித்துள்ளது.


இந்த சூழ்நிலையில் ராதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் நிற்கும் அந்த போட்டோவில் அவருக்கு பின்னால் ஏதோ சமையல் சம்மந்தப்பட்ட பொருட்கள் இருப்பதால், பாக்கியாவின் கவர்மென்ட் சமையல் பொருட்காட்சி தான் இனி வரும் எப்பிஷோட்டில் ஒளிபரப்பப்படவுள்ளதா, இது பாக்கியலட்சுமி சீரியல் செட்டில் எடுக்கப்பட்டதா எனக் கேட்டு வருகின்றனர்.



Advertisement

Advertisement