• Jan 13 2026

பூஜை ஆரம்பம்.! மீண்டும் திரையில் என்ட்ரி கொடுத்த "ஜமா" பட ஹீரோ.. ஹீரோயின் இவரா.?

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் "ஐமா" படத்தை இயக்கி நடித்து விமர்சகர்களையும் ரசிகர்களையும் கவர்ந்த பாரி இளவழகன், தற்போது அடுத்த படத்தின் தயாரிப்பில் முழு உற்சாகத்துடன் இறங்கியுள்ளார். இந்த புதிய திரைப்படத்தின் பூஜை விழா இன்று நடைபெற்றதுடன், அதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த புதிய படத்தில் நடிகை ரோஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோஜாவின் நடிப்பு திறன் மற்றும் கேரக்டர் தேர்வுகள், இப்படத்தின் கதையை உயிர்ப்பிக்க உதவும் என்று படக்குழு கூறியுள்ளது.


மேலும், பாரி இளவழகனுக்கு ஜோடியாக புதிய முகம் ரம்யா ரங்கநாதன் இணைந்துள்ளார். இவர் கடந்த வருடம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் 'கோல்டன் ஸ்பேரோ' பாடலில் பிரியங்கா மோகனனை ஓவர்டேக் செய்து ஆட்டம் போட்ட காட்சி மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.

இந்த புதிய படத்தில் ரம்யா ரங்கநாதன் இணைந்தது தெரியவந்ததும், ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் அவர் “மீண்டும் மாஸ் காட்சிகள் தருவார்” என்று பதிவுகள் பரவிவருகின்றன.

Advertisement

Advertisement