• Jan 19 2025

நயன் பட வில்லனுக்கு இப்படியொரு டிமாண்டா? 10 நிமிசத்துக்கு ஒரு லட்சம் வேணும்! திடீரென ட்விட் போட்ட அனுராக்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் தற்போது தமிழ் சினிமாவிலும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.

இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்து இருந்தார் அனுராக் காஷ்யப். அதில் அவர் நெகடிவ் ரோலில் நடித்து இருந்தாலும் பலரின் வரவேற்பையும் பெற்று இருந்தது.

அத்தோடு அனுராக் இதற்கு முன்பு இரண்டு பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். அவரது முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ்க்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.


இந்த நிலையில், தற்போது அனுராக் காஷ்யப் யாராவது இனி என்னை சந்திக்க வேண்டும் என்றால் எனக்கு லட்சக்கணக்கில் பணம் தர வேண்டும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், புது முகங்களுக்கு உதவியை செய்ய நினைத்து அதிக நேரத்தை நான் வீணடித்து இருக்கிறேன். அதுவும் சராசரியான ஒன்றாகத்தான் இறுதியில் இருக்கிறது. தங்களை  கிரியேட்டிவ் ஜெனியூன்ஸ் என நினைத்துக் கொண்டு இருப்பவர்களிடம் என்னுடைய நேரத்தில் வீணடிக்க விரும்பவில்லை.

இனி என்னை 10 - 15 நிமிடம் வரை சந்திக்க வேண்டும் என்றால் எனக்கு ஒரு லட்சம் ரூபாயும், 30 நிமிடத்திற்கு இரண்டு லட்சமும், ஒரு மணி நேரத்துக்கு 5 லட்சமும் தர வேண்டும் என்பது தான் என்னுடைய ரேட். உங்களால் பணத்தை அட்வான்ஸ் ஆக கொடுக்க முடியும் என்றால் என்னை அழையுங்கள் அல்லது விலகி இருங்கள் என அதிர்ச்சி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.



Advertisement

Advertisement