• Jan 18 2025

'புது ப்ராஜெக்ட்களில் நடிக்கப் போறேன்..' எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகும் ஆதிரை?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

சன் டிவி தொலைக்காட்சியில் மக்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து, விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்தான் எதிர்நீச்சல்.

இந்த சீரியலில் கனிகா, சக்தி, பிரியா, பிரியதர்ஷினி, ஹாரப்பிரியா, சபரி, பிரசாந்த், மதுமிதா, வேல ராமமூர்த்தி, சத்யா என்று  ஒரு பெரிய பட்டாளமே தங்களுக்கு கொடுத்த கேரக்டரில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்கள்.

எதிர்நீச்சல் சீரியல் நடிக்கும் அனைவரின் நடிப்பும் கொஞ்சம் வெகுலியாக இருந்தாலும் ,சில சமயங்களில் நகைச்சுவையாகவும் மிரட்டல் ஆகவும் நடித்து இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

எதிர்நீச்சல்  சீரியலில் பல திருப்பு முனைகளும் அடுத்தடுத்து நகர்ந்து கொண்டிருப்பதோடு, இதன் கதைக்களமே முற்றிலும் மாறுபட்ட வகையில் பெண்கள் எதையும் சாதிக்க துணிந்துள்ளனர். ஆதி குணசேகரின் சகோதரர்களும் அவரின் உண்மை முகம் தெரிந்து அவருக்கு எதிராக திரும்பி உள்ளார்கள். ஆனாலும் தர்ஷினி விஷயத்தில் இந்த சீரியலுக்கு எதிர்ப்புகளும் குவிந்தன.


இந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சத்யா தேவராஜன் திடீரென விலகுகிறார் என்று தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது, அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் புது ப்ரொஜெக்ட்களில் நடிக்க விரும்புறேன்.. இதற்கு முன் என்னை அணுக நினைத்தவர்கள் நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் எனக்கு மெயில் பண்ணுங்க.. என ஒரு பதிவை பகிர்ந்திருந்தார்.


இதனை பார்த்து ரசிகர்கள், எதிர்நீச்சல் சீரியலில் இருந்து சத்யா தேவராஜன் விலகப் போகிறாரா என கேள்விகளை எழுப்ப தொடங்கி விட்டனர். இது வைரலானது.

ஆனால் இதற்கு விளக்கம் கொடுத்தவர், youtube-க்கு ஸ்கிரிப்ட் கொடுக்காதீங்க, இப்போதைக்கு நான் விலகல.. அப்படி விலகுவது என்றால் சொல்கிறேன் என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement