நடிகர் அஜித் தொடர்ந்து ரசிகர்கள் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்து வந்துள்ளார். 2011-ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘மங்காத்தா’ திரைப்படத்தில், அஜித் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். நீண்ட காலத்திற்கு பிறகு, தற்போது இப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் காண்பிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, இயக்குநர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘கிங்மேக்கர்’ என்று பதிவிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தார். இதன் பின்னணி, ‘மங்காத்தா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ‘மங்காத்தா’ படம் ஜனவரி 23ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் ஆகும்.
‘மங்காத்தா’ திரைப்படம் 2011ல் வெளியாகிய போது, அதில் அஜித் நடித்த நெகட்டிவ் பாத்திரம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக அமைந்தது. அவரது கேரக்டர், கதையின் திருப்பங்களுடன் இணைந்து, திரைப்படத்திற்கு பெரும் சுவாரஸ்யம் அளித்தது. இந்நிலையில், இப்படம் ரீ- ரிலீஸ் செய்யப்படுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Listen News!