தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய அளவில் நடிகைகள் வயதான பின்பு சினிமா துறையை விட்டு விலகுவதும் இல்லையெனில் கதாநாயகியை விட்டு வேறு துணை கதாபாத்திரத்தில் நடிப்பதனையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறானவர்கள் மத்தியில் இன்றளவிலும் கதாநாயகியாகவும் எந்த நடிக்கறது படத்திலும் மார்க்கெட்டுக்காக கவர்ச்சி நடனமும் ஆடாத நடிகை என்ற பெயரை கொண்டவர் திரிஷா ஆவார்.

பிரசாந்த் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த ஜோடி திரைப்படத்தின் மூலம் துணை கதாபாத்திரமாக அறிமுகமாகி மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகவும் அறிமுகமாக்கினார்.தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த குந்தவை கதாபாத்திரத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.

இந்த நிலையிலேயே திரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இன்றைய நடிகைகள் மேக்கப் இல்லாமல் தங்களது முகத்தை காட்ட முன்வராத சமையத்தில் எந்தவித மேக்கப்பும் இல்லாத தனது புகைப்படத்தை நோ பில்டர்ஸ் என்ற டாக் லைனுடன் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!