• Jan 18 2025

அனுபமா இஷ்டத்துக்கு நடிச்சது தான் கோடி கோடியாக வசூல் குவிய காரணமா? 12 நாட்களில் இத்தனை கோடியா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான படங்களில் அயலான், மேரி கிறிஸ்மஸ், கேப்டன் மில்லர், மிஷன் சாப்டர் ஒன் சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார், டெவில், மறக்குமா நெஞ்சம், வடக்குப்பட்டி ராமசாமி, லால் சலாம் ஆகிய படங்கள் பெரிதாக வசூலிலும், விமர்சனத்திலும் பேசப்படவில்லை.

இதை தொடர்ந்து குடியரசு தின விடுமுறை மற்றும் காதலர் தினம் என அனைத்தையும் டாக்கெட் செய்து, போட்டி போட்டு தமிழ்  படங்கள் வெளியானது. ஆனால் அத்தனை படங்களும் தோல்வியை தான் சந்தித்தது.

ஆனாலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிற மொழிகளில் வெளியான படங்கள் வசூலில் பட்டையை கிளப்பி வந்தது. அதிலும் மலையாள படங்கள் பெரிதும் பாராட்டப்பட்டது.


இதை தொடர்ந்து தெலுங்கில் வெளியான டில்லு ஸ்கொயர் என்ற திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சித்து மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளனர்.


இந்த நிலையில், டில்லு ஸ்கொயர் திரைப்படம் வெளியாகி 12 நாட்களில் ரூபாய் 103 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

எனினும், அந்த படத்தில் எல்லைமீறி கவர்ச்சி மற்றும் முத்த காட்சிகளில் அனுபமா பரமேஸ்வரன்  நடித்துள்ளாராம். இது தான் இந்த படம் வசூலை வாரி குவிக்க காரணம் எனவும் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement