• Sep 09 2024

டெலிவரிக்கு பொண்டாட்டியை அனுப்பிட்டு பண்ணுற வேலையா? திருமண கோலத்தில் விக்னேஷ் கார்த்திக்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 3 நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக கலந்து கொண்டு பிரபலமானவர்  தான் விக்னேஷ் கார்த்திக்.

இவர் அதற்குப் பிறகு கிங் ஆப் காமெடி சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்பு சன் டிவியில் தொகுப்பாளராக மாறினார்.

அதில் சூரிய வணக்கம், விருந்தினர் பக்கம் போன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், அதற்குப் பிறகு பிக் FMல் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இவ்வாறு தன்னை ஒரு பன்முகத்திறமையாளராக தானே செதுக்கிய விக்னேஷ், வெள்ளித்திரையிலும் குணச்சித்திர  நடிகராக நடிக்கத்  தொடங்கினார். அந்த வகையில் நட்பதிகாரம் 79, சோலா பூரி, குற்றம் நடந்தது என்ன, போன்ற படங்களில் நடித்தார்.


கடந்த ஆண்டு ஷிவானி என்பவரை திருமணம் செய்து கொண்ட விக்னேஷ்  கார்த்தியின் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இந்த நிலையில், தற்போது திடீரென நடிகை பிரகிடா சாகாவுடன் திருமண கோலத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

ஆனாலும் குறித்த புகைப்படம் அவரின் இரண்டாவது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு சிலர் பொண்டாட்டியை டெலிவரிக்கு அனுப்பி விட்டு இப்படி போஸ்ட் போட்டால் என்ன நிலைமை அப்படியே ஷாக் ஆகிவிட்டோம் என்று கூறி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement