• Jan 18 2025

நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?-இத்தனை வீடுகள் வைத்திருக்கின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருவர் தான் ஷாருக்கான்.சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு வெளியான தீவானா என்ற படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார். 

கடந்த 30 ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருந்து வரும் இவர் இறுதியாக அட்லி இயக்கத்தில் ஜவான் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம்  ரூ. 1000 கோடிக்கு வசூலை குவித்தது. 


இதனை அடுத்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள டுங்கி திரைப்படம் வருகிற டிசம்பர் 22ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படமும் கண்டிப்பாக ஷாருக்கானுக்கு ஹிட் படமாக அமையும் என்கின்றனர்.

இந்த நிலையில் ஷாருக்கான் இன்றைய தினம் தன்னுடைய 58வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார்.அந்த வகையில் சொத்து மதிப்பு குறித்து தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. நடிகர் ஷாருக்கான் உலகளவில் அதிகப்படியான சொத்துக்களை கொண்ட நடிகர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.

இவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.6 ஆயிரத்து 300 கோடியாம். மும்பை, துபாய், லண்டன் என வீடுகள், Red Chillies தயாரிப்பு நிறுவனம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்கிற ஐபிஎல் அணி, நிறைய சொகுசு கார்கள் என வைத்துள்ளார்.

Advertisement

Advertisement