• Jan 18 2025

உமாபதியை விட ஐஸ்வர்யாவுக்கு வயது அதிகமா?- தம்பி ராமையா போட்ட முக்கிய கண்டிஷன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அர்ஜூன் நீண்ட காலங்களாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும தயாரிப்பாளராகவும் பன்முகம் காட்டி வருகிறார். ஹீரோவாக ஜென்டில்மேன், முதல்வன் உள்ளிட்ட முன்னணி படங்களில் நடித்துவந்த இவர், தற்போது கேரக்டர், வில்லன் ரோல்களில் கலக்கி வருகிறார். 

சமீபத்தில் இவர் வில்லனாக நடித்திருந்த விஜய்யின் லியோ படம் வெளியாகி வசூலில் மாஸ் காட்டி வருகிறது.வரது மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் கடந்த 2013ம் ஆண்டில் பட்டத்து யானை என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படம் இவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது. இதையடுத்து தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான சொல்லிவிடவா படம் வெளியானது. 


இதனிடையே பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை ஐஸ்வர்யா காதலித்து வந்தார்.இவர்களுக்கு அண்மையில் நிச்சயதார்த்தமும் நடந்தது. இது குறித் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. 

நடிகர் அர்ஜுன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் உமாபதியும் ஒரு போட்டியாளர். அப்போது ஐஸ்வர்யா அர்ஜுவல் அந்த படப்பிடிப்பு தளத்திற்கு அடிக்கடி சென்று வருவாராம். இதனால் இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறி இருக்கிறது.


அர்ஜுனுக்கு இந்த விஷயம் தெரிந்ததும், உடனே ஓகே சொல்லி விட்டாராம். ஆனால் தம்பி ராமையா ஒரு கண்டிஷனுடன் தான் இந்த திருமணத்திற்கு ஓகே சொல்லியிருக்கிறாராம்.அதாவது ஐஸ்வர்யா திருமணத்திற்குப் பிறகு நடிக்கவே கூடாது என்று சொல்லியிருக்கின்றாராம்.

மேலும் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி இருவருக்கிடையே மூன்று வயது வித்தியாசம் இருக்கிறதாம். உமாபதிக்கு 28 வயது, ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு 31 வயது என பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் சொல்லி இருக்கிறார். கண்டிஷன் குறித்தும் அதே விமர்சகர் தான் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement