• Jan 18 2025

லியோ படத்தின் வெற்றி விழாவை ஒளிபரப்பப்படவுள்ள பிரபல தொலைக்காட்சி- அதுவும் எப்போது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி திரைக்கு வந்தது. கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் ரிலீஸான இப்படம் இரண்டாவது வாரமும் சக்கைப்போடு போட்டதால் கடந்த வாரம் புதுப்படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. 

இந்த நிலையில், தீபாவளி வரை இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நவம்பர் 3-ந் தேதி சிறு பட்ஜெட் படங்கள் வரிசையாக ரிலீசாக உள்ளன.கூட்டமில்லாததால் லியோ படத்திற்கு ஒதுக்கப்பட்ட திரையரங்குகளில் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.


மேலும் இப்படம் வசூலில் 550 கோடியை கடந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்றைய தினம் பிரமாண்டமாக நடைபெற்றது.இதில் விஜய் சொன்ன குட்டிக் கதை, கருத்துக்கள்,அட்வைஸ்ட் எல்லாம் இப்போ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது நேற்று நடைபெற்ற இந்த வெற்றி விழா வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement