• Mar 15 2025

படு ஜோராக நடந்த இந்திரஜாவின் வளைகாப்பு... இணையத்தை கவர்ந்த போட்டோஸ்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் ஆனவர்கள் தான் ரோபோ சங்கர் இந்திரஜா மற்றும் அவருடைய கணவர் கார்த்தி. ரோபோ சங்கரின் மகள் ஏற்கனவே விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.

அவர் வேறு படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் தனது தாய் மாமனான கார்த்தியை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் நுழைந்து விட்டார். இவர்களுடைய திருமணம் படு பிரமாண்டமாக நடைபெற்றது.

d_i_a

இவர்களின் திருமணத்தின் போது உலக நாயகன் கமலஹாசன் விலை உயர்ந்த பரிசை கிப்டாக கொடுத்திருந்தார். அதுபோலவே நயன்தாரா உட்பட பல பிரபலங்கள் அவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை கொடுத்து இருந்தார்கள்.


இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கி இருந்தார்கள் . இதன்போது இந்திரஜிதா தான் கர்ப்பமாக இருந்த விஷயத்தை சொல்ல, விஜய் டிவி மேடையிலேயே அவருக்கு நலங்கு வைத்து அழகு பார்த்தார்கள்.

இந்த நிலையில், ரோபோ சங்கரின் மகளும் கார்த்தியின்  மனைவியுமான இந்திரஜாவின் வளைகாப்பு பிரம்மாண்டமாக  நடைபெற்றுள்ளது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையதள பக்கத்தை கவர்ந்துள்ளன.

Advertisement

Advertisement