• Jan 08 2026

படம் ரிலீஸ் பண்ணுவன்! சினிமா நியூஸ் பார்க்கமாட்டேன்! ட்ரோலில் சிக்கிய உதயநிதி!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா செய்திகளை விட இந்த மீம்ஸுகளுக்கு பவர் கொஞ்சம் அதிகம் தான் போல என்ன சம்பவம் நடந்தாலும் இந்த மீம்ஸ் பசங்க ஏதாவது செய்து ட்ரெண்டிங் ஆக்கிவிடுகிறார்கள். இந்நிலையில் இன்று ட்ரெண்டிங்கில் துணை முதல்வர் உதயநிதி வலம் வருகிறார். அப்டி என்ன நடந்தது என்று பார்ப்போம். 


நேற்று அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு எல்லோருக்குமான தலைவர் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் விஜய் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய பேச்சு இப்போது வைரலாகி வருகிறது.  அதிலும் மன்னர் ஆட்சி நடக்கிறது. 2026ல் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் போன்ற பேச்சு தான் இந்த பரபரப்புக்கு காரணம்.


இது குறித்து துணை முதல்வர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு அவர் கூறிய பதில் தான் இவ்வளோ ட்ரோல்களுக்கு காரணம். விஜய் கூறியது பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டதற்கு அவர் "நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை" என்று நழுவி விட்டார். இது போதாதா நெட்டிசன்கள் தற்போது இவரை கிண்டல் செய்யும் வகையில் மீம்ஸ் போட்டு வருகிறார்கள். இதோ அந்த ட்ரெண்டிங் மீம்ஸ் பாருங்கள்.


Advertisement

Advertisement