மாடல் அழகி ஹினா கான் ஜம்மு தனது இன்ஸராகிரேம் பக்கத்தில் போட்ட ஒரு பதிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட ஹினா கான் ஜம்மு படித்துக்கொண்டு இருக்கும்போதே, மாடல் துறையில் இருந்த ஆர்வம் காரணமாக மாடல் அழகியாக மாறினார். ஒரு சில விளம்பரங்களில் நடித்து வந்த இவருக்கு பஞ்சாப் மற்றும் ஹிந்தி தொலைக்காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஹிந்தி பிக் பாஸ் சீசன் 11 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பிரபலமான இவர் கில்லாடி என்ற ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார்.அடுத்தடுத்து சீரியல்களில் நடித்து வந்த ஹினா கானுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்றாம் நிலை மார்பக புற்றுநோயால், பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்குரிய சிகிச்சை பெற்று வருவதாகவும் பகிர்ந்து இருந்தார்.
தொடர்ந்து புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வரும் ஹினா மருத்துவமனையில் சிறுநீரக பையை கையில் வைத்துக்கொண்டு, மருத்துவமனையில் நடந்து செல்லும் போட்டோவை பகிர்ந்து இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் வருத்தம் தெரிவிப்பதுடன் விரைவில் குணமடைய வாழ்த்துக்கூறி வருகின்றனர்.
மேலும் மார்பக புற்று நோய் மூன்றாம் கட்டம் என்று சொன்ன போது கவலையில் மூழ்கி போனேன். என் வாழ்கையில் அது மிகவும் மோசமான நாட்கள். ஆனால், அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறேன். இருப்பினும், இந்த நோயில் இருந்து நான் முழுமையாக வெளியேறுவதற்கு தேவையான அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Listen News!