• Oct 08 2024

மணிமேகலை செய்தால் அது கண்டெண்ட்.. பிரியங்கா செய்தால்..? விளாசிய ஜோ மைக்கல்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் காணப்படுகிறது. இந்த சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதன் டைட்டிலை பிரியங்கா வின் பண்ணி உள்ளார். இதனால் இவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை  தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை இந்த நிகழ்ச்சி இருந்து விலகி இருந்தார். அதற்கு காரணம் இம்முறை பங்கு பற்றிய போட்டியாளர்களுள் உள்ளதொகுப்பாளினி ஒருவர் தன்னை வேலை செய்ய விடாமல் இடையூறு செய்வதாக தெரிவித்து இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகினார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறுவதற்கு காரணம் பிரியங்கா தான் என அவருக்கு எதிராக தொடர்ந்தும் பலர் தமது கருத்துக்களையும் வெறுப்புகளையும் கொட்டி தீர்த்து வந்தார்கள். ஆனாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய சக போட்டியாளர்கள் பிரியங்கா மீது எந்த தப்பும் இல்லை மணிமேகலை கொஞ்சம் பொறுத்து போய் இருக்கலாம் என்று சொல்லியிருந்தார்கள்.

இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடர்பில் ஜோ மைக்கல் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் பிரியங்காவுக்கு ஆதரவாக மணிமேகலைக்கு எதிராகவே பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். தற்போது இவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது.


அதாவது மணிமேகலை ஆரம்பத்திலேயே இப்படி ஒரு பிரச்சனை இருக்குது என்றால் விலகி இருக்க வேண்டும். தனியா யூட்யூப்  வைத்திருக்கின்றார் என்றாலும் அதற்கு காரணம் விஜய் டிவியில் கிடைத்த புகழ்தான். 

குக் வித் கோமாளி ஒரு எபிசோடுக்கு 30000 சம்பளமாக கொடுக்கின்றார்கள். இதுவரை 20 எபிசோட் வரை கடந்துள்ளார். கடைசி எபிசோட் வரை இருந்திருக்காமல் ஆரம்பத்திலேயே இவர் இந்த பிரச்சனையை சொல்லி வெளியேறிருக்கலாம் தானே என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் பிரியங்கா மீது பலருக்கு வன்மம் இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் மணிமேகலை எத்தனையோ பேரை கழுவி ஊற்றியுள்ளார் அவர் செய்தால் அது அது கன்டென்ட் பிரியங்கா செய்தால் அது டோமினேட் பண்ணுவதா என விளாசி உள்ளார்.

Advertisement