• Dec 29 2025

மலேசியாவில் தளபதி ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்ட கிஃப்ட் என்ன தெரியுமா.?

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் விஜய்  நடிக்கும் இறுதிப் படம் ஜனநாயகன் என்ற அறிவிப்பு வெளியானதுமே  இணைய முதல், அவரை நேரில் சந்தித்து கல்வி உதவித் தொகை வாங்கிய மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள், ரசிகர்கள் என பலரும்  மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது படத்தில் நடியுங்கள் என்று கோரிக்கை வைத்தனர்.

விஜயின் குட்டி கதை சொல்லட்டுமாசொல்வதில் தொடங்கி, என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பி என்ற பேச்சு வரையில் ரசிகர்களை உற்சாகம் செய்யும் தளபதியின் ரியாக்ஷன்கள் எல்லாம்  ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன. 

இவை எல்லாவற்றையும் தாண்டி  தளபதி மீது இருக்கக்கூடிய பாசமும் அன்பும்  ஏனைய நடிகர்களின் படங்களை திரையில் பார்த்தாலும், கையில் வைத்திருக்கும் மொபைலில்  அவருடைய முகத்தை பார்க்கும்போது சரி வருகின்ற ஆனந்தத்திற்கு எல்லை கிடையாது. 


உலக அளவில் பல மொழிகளையும் கடந்து  கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு உள்ளார் தளபதி விஜய். இவர்  சினிமாவை ஒதுக்கி மக்களுக்காக அரசியல் கட்சியை தொடங்க வேண்டும் என்று எடுத்த முடிவு பலராலும் பாராட்டப்பட்டது .

இந்த நிலையில், மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் ஒளிரும் கை கடிகாரம் போன்ற ஒன்று பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அதனால் அரங்கமே இரவு நேரத்தில் ஒளிர்ந்த வண்ணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


 

Advertisement

Advertisement