• Jan 19 2025

தெலுங்கில் இருந்தாலும் விஜய்க்கு நான் சொல்லிக்கொடுப்பேன்! அவர் யோசித்துதான் செய்வார் லாரன்ஸ் நெகிழ்ச்சி

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தளபதி என அழைக்கப்படும் விஜய் சமீபத்தில் அரசியலில் ஈடுபடப்போவதாகவும் , இன்னும் இரண்டு திரைப்படங்களில் மாத்திரமே நடிக்க போவதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்தே பார்க்கும் அனைத்து சினிமா பிரபலங்களிடமும் விஜயின் அரசியல் வருகை பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


அவ்வாறே சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸிடமும் கேட்டுள்ளனர். முன்னணி நடிகர் , இயக்குனர் , நடன கலைஞர் என பல பரிமாணங்களில் பணியாற்றும் லாரன்ஸ் சமீபத்தில் மாற்றம் எனும் அறக்கட்டளை ஒன்றை தொடங்க ஏழை மக்களுக்கு உதவி வருகின்றார்.


இவ்வாறு இவர் உதவி செய்யும் இடத்தில் பத்திரிகையாளர்கள் சென்று பல கேள்விகளை முன்வைத்தனர். அவ்வாறே விஜயின் அரசியல் வருகை பற்றியும் கேட்டபோது. “நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி, தெலுங்கில் படம் நடித்தாலும் அவருக்கு நடனம் சொல்லி கொடுப்பேன்; அவர் எனது நண்பர், என்ன செய்தாலும் யோசித்துதான் செய்வார்" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement