• May 20 2024

இன்று முதல் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தொடக்கம்.. முதல் நாளே இப்படி ஒரு காட்சியா?

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

அஜித் நடிக்க இருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் பூஜை நேற்று சென்னையில் மிக எளிமையாக நடந்ததாக கூறப்பட்ட நிலையில் இன்று ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இன்றைய படப்பிடிப்பிற்காக ஏற்கனவே கடந்த சில நாட்களாக செட் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில் இன்று முதல் ஒரு அதிரடி ஆக்சன் காட்சி படமாக்க இருப்பதாகவும் இதற்கான ஸ்டண்ட் மாஸ்டர்கள் மற்றும் துணை நடிகர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் நாளே ’குட் பேட் அக்லி’ படத்தின் அதிரடி ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கடந்த சில வருடங்களாக வெளியான அஜித் படங்களில் இன்ட்ரோ பாடல் இல்லாத நிலையில் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்ததால் அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இந்த ஷெட்யூலில் ஒரு இன்ட்ரோ பாடல் காட்சி படமாக்கப்பட இருப்பதாகவும் நூற்றுக்கணக்கான துணை நடிகர், நடிகைகளின் அட்டகாசமான டான்ஸ் உடன் இந்த பாடல் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் முதல் ஷெட்யூலில் ஒரு அதிரடி ஆக்சன் காட்சி மற்றும் இன்ட்ரோ பாடல் காட்சி படமாக்கப்பட இருப்பதாக ’குட் பேட் அக்லி’ படத்தின் படக்குழுவினர்களிடமிருந்து செய்தி கசிந்துள்ளது.

Advertisement

Advertisement