• Jan 19 2025

விஜயாவுக்கு அண்ணாமலை போட்ட கண்டிஷன்? நோஸ்கட்டான ரோகிணி!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை.  இந்த சீரியலின் இன்றைய எபிசோடில், முத்து, மீனா, ரவி ஆகியோர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர, அவர்களை  உள்ளே வாங்க என அழைத்த இன்ஸ்பெக்டர் அவர்களை உட்கார வைத்து அவர்களுக்கு டீ வாங்கி வரச் சொல்கிறார். மேலும் முத்து விடம் உனக்கு கிடைச்ச பொண்டாட்டி யாருக்கும் கிடைக்க மாட்டாங்க என மீனாவை பாராட்டி பேசுகிறார்.

இதை அடுத்து இந்த விஷயத்தை பெருசாக வேண்டாம் எனக்கு கார் கிடைச்சா போதும் என்று முத்து சொல்ல, இன்ஸ்பெக்டர் அவனை கூட்டிட்டு வாங்க என்று சொன்னதும் போலீசார் சிட்டியை கூட்டி வந்து நிற்கின்றார்கள்.

இவன்தான் அந்த வீடியோவை எடுத்தது. இவன்கிட்ட இருந்து ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வாங்கி தாரேன் என்று போலீஸ் சொல்ல, இவனே கொள்ளை அடிக்கிறவன். இவன்ட பணம் எனக்கு எதுக்கு. இவன போல தப்பு பண்றவங்களுக்கு சரியான தண்டனை கிடைக்கனும் என்று முத்து சொல்ல, சிட்டி மீது மீது எஃப் ஐ ஆர் போட சொல்கிறார் இன்ஸ்பெக்டர்.

அதன் பின்பு கார் சாவியை வாங்கிக்கொண்டு அவர்கள் வெளியே வரும் போது, சிட்டி மட்டும் இப்போ வெளிய இருந்து இருந்திருந்தால் உங்க கையால நான்கு அடி அடிக்கச் சொல்லி இருப்பேன் என்று மீனா சொல்ல, அவ்வளவுதானே என்று முத்துசிட்டியை பிடித்து அறைய போலீசார் அவர்களை தடுத்து அனுப்பி வைக்கிறார்கள்.

மறுபக்கம் வீட்டில் உள்ள எல்லாரையும் கூப்பிட்டு முத்து நிரபராதி என்ற வீடியோவை போட்டு காட்டுகிறார் அண்ணாமலை. அத்துடன் மீனா தனி ஆளாக இருந்து தன்னுடைய புருஷனை வெளியே கொண்டு வந்து இருக்கா என்று சொல்லி சந்தோஷப்படுகிறார். ஆனாலும் நானே முத்து மேல சந்தேகப்பட்டுட்டேன் என்று கண்கலங்குகிறார்.


இதன் போது மனோஜ் இது அவனோட செட்டப்பா இருக்கும் என்று சொல்ல, விஜயாவும் அவன் பண்ணினாலும் பண்ணுவான் என்று சொல்ல, உங்க ரெண்டு பேருக்குமே நல்ல புத்தி கிடையாது என்று திட்டுகிறார் அண்ணாமலை. பிறகு ஆர்த்தி கரைத்து எடுத்து வருமாறு விஜயாவிடம் சொல்ல, அதெல்லாம் என்னால பண்ண முடியாது என்று சொல்கிறார். அதற்கு நீ பண்ணுவியா மாட்டியான்னு கேட்கல போய் எடுத்து வா என்று மிரட்டி அனுப்புகிறார்.

இதை தொடர்ந்து முத்து, மீனா, ரவி வீட்டுக்கு வர அவர்களை வாசலில் நிற்க வைத்து விஜயா ஆர்த்தி தட்டுடன் வருகிறார். இதன் போது ஸ்ருதியையும் ரோகிணியையும் கூப்பிட்டு ஆர்த்தி எடுக்குமாறு சொல்ல, மூன்று பேரும் முத்து, மீனாவுக்கு ஆர்த்தி எடுக்கின்றார்கள்.

முத்து உள்ளே வந்ததும் அவரை கட்டிப்பிடித்து என்னை மன்னித்து விடுடா என்று அண்ணாமலை சொல்ல, என்னப்பா நீ என்கிட்ட எல்லாம் மன்னிப்பு கேட்கிறா,  நீ என்ன வேணாலும் பேசு, அடி ஆனால் என்கிட்ட மட்டும் பேசாம இருக்காத என்று முத்து சொல்லுகிறார்

இதை தொடர்ந்து மீனா விஜயாவிடம் என் புருஷன் குடிக்கவே இல்ல இப்ப என்ன யாரும் குடிகார பொண்டாட்டி என்று சொல்ல மாட்டாங்க என்றும்,  ரோகினியிடம் என் புருஷன எனக்கு திருத்த தெரியல. ஆனா அவர் குடிக்கவே இல்லை. இனி என்னவாக இருந்தாலும் யோசிச்சு பேசுங்க என்று பதிலடி கொடுக்கிறார்.

இதன்போது அங்கு வந்த விஜயா உன் புருஷன் அன்னைக்கு ஒரு நாள் தான் குடிக்கல அதுக்காக அவன் குடிகாரன் இல்லை என்று ஆயிடுமா என்று பேசி ரோகிணியை அழைத்துச் செல்கிறார்.

இதைத்தொடர்ந்து சத்யா சிட்டியை பார்க்கச் செல்ல, உனக்கு அட்வைஸ் பண்ற உன் மாமா குடிச்சிட்டு சுத்திட்டு இருக்காருன்னு உன்கிட்ட காட்ட தான் வீடியோ எடுத்தேன். அதை என் பக்கத்தில் இருந்த பன்னாட குடிபோதையில் யாருக்கோ அனுப்பி இருக்கான் என்று சொல்லி சமாளிக்கிறார். மேலும் என் மேல உனக்கு கோபம் இல்ல தானே என்று பேசி சத்யாவை நம்ப வைக்கின்றார். நான் வார வரைக்கும் நீ தான் எல்லாத்தையும் பாத்துக்கோனும் என்று சொல்லி அனுப்புகிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement