• Oct 18 2024

குக் வித் கோமாளி 5வது சீசனில் நான் பங்கேற்க மாட்டேன்! சற்றுமுன் வெங்கடேஷ் பட் வெளியிட்ட அறிவிப்பு

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உலகம் முழுக்க பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த நான்கு சீசன்களாக மாபெரும் வெற்றியை கண்டுள்ள குக் வித் கோமாளியின் 5வது சீசன் எப்போது ஆரம்பம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை துவங்குவது தான் விஜய் டிவியின் வழக்கம். ஆகவே விரைவில் குக் வித் கோமாளி ஆரம்பமாக இருக்கிறது என்கின்றனர். 

குக் வித் கோமாளி சீசன் 5ன் போட்டியாளர்களாக நடிகை வடிவுக்கரசி,டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தீபா வெங்கட்,தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா,நடிகை மாளவிகா மேனன்,பிக் பாஸ் 7 நடிகர் விஷ்ணு,பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடிக்கும் 'ஹேமா' , நடன இயக்குனர் ஸ்ரீதர் மகள் அக்ஷதா என்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடக்கப்பட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.


குக் வித் கோமாளியில் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் தான் நடுவர்களாக இருந்து வந்தனர். அவர்கள் போட்டியாளர்களின் சமையலை பற்றி விமர்சனங்கள் கொடுப்பது மட்டுமின்று காமெடியாகவும் ரசிகர்களை கவர்ந்து வந்தனர்.


இந்த நிலையில், குக் வித் கோமாளி 5வது சீசனில் நான் பங்கேற்க மாட்டேன் என வெங்கடேஷ் பட் சற்றுமுன் அறிவித்து இருக்கிறார். அதனால் ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

ஆனாலும், வேறொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுபற்றி விரைவில் அறிவிக்கிறேன் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இது தொடர்பில்  கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement