• Jan 19 2025

அஜித்தின் பட அப்டேட் வருதோ இல்லையோ செல்ஃபி மட்டும் செம்மையா வந்துடும்..

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன. அதில் விடாமுயற்சி படத்திற்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் ஒரு பாடல் காட்சி மட்டும் தான் எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.

அஜித்குமார் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள GT4 Championship 2025 கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக பயிற்சி எடுத்து வருகின்றார். அதேபோல குட் பேட் அக்லி படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகின்றார். இதனால் மிகவும் பிஸியான நடிகராக அஜித்குமார் காணப்படுகிறார்.

இந்த நிலையில், தற்போது சமூக வலைதள பக்கங்களில் நடிகர் அஜித் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கமான ஒன்றாக கருதப்படுகின்றது.


அதன்படி அஜித் நடிக்கும் படங்களின் அப்டேட்கள் வருவதை விட அஜித்தின் நடவடிக்கை தொடர்பான அட்டேட்டுகள் இணையத்தில் தொடர்ந்து வைரலானவாரே உள்ளன. அதன்படி அவருடைய புகைப்படத்தை அஜித் வெளியிடாவிட்டாலும் அவருடைய பட குழுவினர் அல்லது நெருக்கமானவர்கள் வெளியிட்டு வைரல் ஆக்குவார்கள்.

அந்த வகையில் தற்போது அஜித் குமார் கருப்பு நிற கூலிங்  கிளாஸ் அணிந்து செல்பி ஒன்றை எடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணைய வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு அஜித்தின் புது கெட்டப்பை பார்த்து பலரும் தமது கமெண்ட்களை முன்வைத்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement