• Dec 29 2025

என்னோட ரசிகர்களுக்காக சினிமாவையே விட்டுக் கொடுக்கின்றேன்.! விஜயின் கடைசி நடனம்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  இந்த நிகழ்ச்சியில் தளபதி  ஆடிப்பாடி தனது ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். 

ஜனநாயகன் படத்தில் விஜய் குரலில் உருவான பாடல் தளபதி கச்சேரி பாடல். இந்தப் பாடல் தான் படக்குழு தரப்பில் முதல் பாடலாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமீதா உள்ளிட்ட பலரும் நடனமாடி உள்ளார்கள். 

இந்த நிலையில், அந்தப் பாடலை பாடி முடித்த பின்பு விஜயை நடனமாடச் சொல்லி ரசிகர்கள் கோரிக்கை விட்டுள்ளனர். அதனை ஒப்புக்கொண்ட விஜயும் நடனமாடியுள்ளார்.  இதை பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்தில் உற்சாகம் அடைந்துள்ளனர்.  இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 


மேலும்  பல எமோஷனலான  விஷயங்களை விஜய் பகிர்ந்து கொண்டுள்ளார்.  விஜய் அரசியலுக்கு சென்றாலும் சினிமாவிலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கையை முன் வைத்தனர். அதற்கு  பதில் அளிக்கும் வகையில் விஜய் பேசி இருந்தார். 

அதாவது, என்னுடன் பயணிக்கும் ரசிகர்கள்  கடந்த 33 ஆண்டுகளாக எனக்கு பல இடங்களில் நின்றுள்ளார்கள்.  அதனால் தான் நான் இன்றைக்கு இங்கு நிற்கின்றேன்.  அடுத்த 30, 33 ஆண்டுகளுக்கும் நான் அவர்களுக்காக நிற்பேன்.  எனக்கு ஒன்றென்றால்  ரசிகர்கள் தியேட்டரில் நிற்கின்றார்கள். இனி அவர்களுக்கு ஒன்று என்றால் நான் அவர்கள் வீட்டில் நிற்பேன். எனக்காக எல்லாத்தையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கின்றேன் என்று கூறியுள்ளார். 


Advertisement

Advertisement