• Apr 16 2026

ஜனநாயகன் ஆடியோ லாஞ்சில் உருகி உருகி பேசிய நடிகைகள்..!

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

ஜனநாயகன் படத்தில் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  இதில் படக் குழுவினர் மட்டுமில்லாமல் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும்  கலந்து கொண்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தளபதி விஜய் அங்கு மேடையில் அமைக்கப்பட்ட மிகவும் நீளமான நடைபாதையில் நடந்து சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தார் .

நடிகர் விஜயின் இறுதிப் படமான ஜனநாயகன் படத்தில் இசை வெளியீட்டு விழா மலேசியாவில்  நடக்க திட்டமிடப்பட்ட போது, அங்கு அரசியல் பேசக்கூடாது, அரசியல் கட்சி சம்பந்தமான பொருட்களை எடுத்து வரக்கூடாது என்று விதிமுறைகள் விதிக்கப்பட்டது.  ஆனாலும்  தவெக தொடர்பான பொருட்களை தவிர்த்தாலும் ரசிகர்கள் TVK.. TVK.. என்று கத்திக் கொண்டிருந்துள்ளார்கள்.  

இந்த இசை வெளியீட்டு விழாவில் முதல் பாடலாக மேகமாய் வந்து போகின்றேன்  என்ற பாடலில் தொடங்கி, விஜய், பிரபுதேவாவின்  நடனங்களோடு  கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள் விஜய் பற்றி  கூறிய கருத்துக்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன. 


அதன்படி  நடிகை பிரியாமணி கூறுகையில், விஜய் ஓட மிகப் பெரிய ரசிகை நான். அவர் ரொம்ப நல்ல டான்சர். ஒரு தடவையாவது அவர் கூட டான்ஸ் ஆடணும்னு ஆசைப்பட்டேன்.  பரவாயில்லை, அவர் கூட நடிச்சிட்டேன் என்று சந்தோஷப்பட்டு உள்ளார். 

அதேபோல ஜனநாயகன் படத்தின் இயக்குனர் எச். வினோத் கூறுகையில், ஜனநாயகன் படத்தின் கடைசி 20 நிமிடங்களில் விஜய் சாருடைய பேர்வெல் வீடியோ இருக்கின்றது. அதில் அழ வைக்கப் போகின்றோம் என சிலர் சொல்லுகின்றார்கள். அதெல்லாம் எதுவுமே இல்லை. படத்தின் முடிவில் நம்பிக்கை மட்டும் தான் இருக்கின்றது. ஏன் என்றால் தளபதிக்கு எண்ட் கிடையாது பிகினிங் மட்டும்தான் என்று கூறியுள்ளார். 

மேலும் நடிகை மாளவிகா மோகனன் கூறுகையில், விஜய் சாருடன் பணியாற்றியது ஒரு பெரும் பாக்கியம். அவரை நண்பர் என்று அழைப்பது அதைவிட பெரும் பாக்கியம். எல்லா வகையிலும் அவர் சிறந்த மனிதர். உலகில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் போலவே நானும் அவரது படத்துக்கு வாழ்த்துகின்றேன். இப்போதும் எப்போதும் தளபதி ரசிகை தான் என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement