• Sep 30 2025

தமிழ் கலாச்சாரத்துக்காக தான் இசையமைப்பேன்! GV பிரகாஷின் பெருமையை பேசிய தனுஷ்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தனுஷ் இயக்கத்தில்  நான்காவது படமாக உருவாகியுள்ள படம் தான் இட்லி கடை. இந்த படம் தனுஷ் நடிக்கும் 52 ஆவது படமாக அமைந்துள்ளது.  தனுஷ் இயக்கி நடிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். 

இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  அக்டோபர் முதலாம் தேதி படம் ரிலீஸ் ஆகவுள்ளது.  இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்த படத்தில்  நித்யாமேனன், ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே, சமுத்திரகனி, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இட்லி கடை படம் வெளியாக இன்னும்  இரண்டு நாட்கள் உள்ள நிலையில் நேற்றைய தினம் படக் குழுவினர்  புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

இட்லி கடை படம் வெளியாகும்  அதே நாளில் 'காந்தாரா சாப்டர் ஒன்'  படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  ஏற்கனவே காந்தாரா படத்தில் முதலாவது பாகம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்த நிலையில்,  ரிலீஸ், ட்ரெண்டுக்காக அல்ல தமிழ் கலாச்சாரத்திற்காகத் தான் இசை அமைப்பேன் என ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதற்கு சாட்சியாகவே இட்லிக் கடை படத்தின் வேரூன்றிய பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன என்று  இதனை பெருமையுடன் பகிர்ந்து உள்ளார் தனுஷ். 




 

Advertisement

Advertisement