• Dec 07 2024

எனக்கு நீதி வேண்டும்! என் தற்கொலைக்கு அரசுதான் காரணம்! 51 வயது நடிகை பாலியல் புகார்!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

சமீபத்தில் மலையாள திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவத்தில் ஒன்று ஹேமா கமிட்டி அறிக்கை. 'மலையாளத் திரைத் துறையில் பாலியல் வன்கொடுமை' தொடர்பான புகார்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மணியன்பிள்ளை ராஜு, இடைவேல பாபு தொடங்கி எம்.எல்.ஏ முகேஷ் வரை பலர் மீது பாலியல் புகார்கள் வந்தன.


இந்த நிலையில், 51 வயதான நடிகை ஒருவர் தன் புகாரை வாபஸ் வாங்குவதாக தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ``தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைக்கு நீதிகேட்க ஒரு பெண் முன்வந்தால், அந்தப் பெண்ணுக்கு அரசிடமிருந்து எந்தப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. என்னால் தாங்க முடியாத பல துன்பங்களை நான் அனுபவித்திருக்கிறேன்.


நான் குற்றமற்றவள். எனக்கு நீதி கிடைக்க வேண்டும். ஒருவேளை நான் தற்கொலை செய்துகொண்டால், அதற்கு அரசு தான் பொறுப்பு. என்னைப் போல் வேறு யாரும் பாதிக்கப்படாமல் இருக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த விடையம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

Advertisement

Advertisement