• Oct 31 2025

குடும்ப கஷ்டத்தால் எத்தனையோ மேடை ஏறினேன்.. ஆனாலும் வாய்ப்பு கிடைக்கல.! TR பகீர்

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனித்துவமான குரல், நடிப்பு மற்றும் மனதை நிறைக்கும் காமெடி மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர் டி. ராஜேந்திரன். இவர் சமீபத்திய நேர்காணலில், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கலைப் பயணத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.


நேர்காணலின் போது, டி. ராஜேந்திரன் கூறியதாவது, “குடும்பத்தில் ரொம்ப கஷ்டம் இருந்தது. அதனால் மேடையில் பாட வாய்ப்பு கேட்டேன், ஆனால் அது கிடைக்கவில்லை. இதனால் நான் மிமிக்கிரி பண்ண ஆரம்பிச்சேன்,” என தெரிவித்துள்ளார். 

அத்துடன், டி. ராஜேந்திரன் தனது மிமிக்கிரி பயணத்தை, எம்.ஆர். ராதா, நம்பியார், பாலைய்யா மாதிரி அனைவரையும் நான் மிம் செய்ய ஆரம்பித்து தொடங்கியதாகவும் தெரிவித்திருந்தார். 


இவ்வாறு மிமிக்கிரியில் ஆரம்பித்தவர், பின்னர் திரையுலகில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தன்னுடைய திறமையை வலுப்படுத்தி, காமெடி character roles, mimicry கலை, பாடல் மற்றும் இயக்கம் என்பவற்றின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கினார்.

Advertisement

Advertisement