தமிழ் திரையுலகில் காதல், காமெடி மற்றும் உணர்ச்சியை இணைக்கும் படங்கள் எப்போதும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து விடும். இந்நிலையில், இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரிலீஸ் ஆன புதிய திரைப்படம் “ஆண்பாவம் பொல்லாதது” இன்று (31 அக்டோபர் 2025) திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பல்வேறு கருத்துகளை எழுப்பியுள்ளது.

இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் ரியோ, மாளவிகா மனோஜ், மற்றும் விக்னேஷ் காந்த் நடித்துள்ளனர். ரியோ ஒரு ஐடி வேலையில் இருக்கும் சாதாரண இளைஞராக அறிமுகமாகிறார். அவர் செம மாடர்ன் சிந்தனையைக் கொண்ட மாளவிகாவை திருமணம் செய்து கொள்கிறார். ஆரம்பத்தில் எல்லா விஷயங்களும் சரியாகப் போயிருப்பதாக தோன்றினாலும், பின்னர் வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்சனைகள் உருவாகி கதையை சுவாரஸ்யமாக்குகின்றன.
“ஆண்பாவம் பொல்லாதது” படத்தின் கதைக்களம் காதல், குடும்ப உறவுகள் மற்றும் வாழ்க்கை சிக்கல்களை கலந்துள்ளது. ஆரம்பத்தில் சுலபமான வாழ்க்கை கொண்ட இருவரின் வாழ்க்கை, எதிர்பாராத சவால்களால் சிக்கலாக மாறுகிறது. இப்பிரச்சனைகள் எப்படி கதையின் திருப்பங்களை உருவாக்குகின்றன என்பது தான் படத்தின் முக்கிய விசுவல்.

விமர்சகர்களின் கருத்துகளின்படி இப்படத்தின் முதல் பாதி முழுவதும் சிரிப்பு மற்றும் சுவாரஸ்யத்தால் நிரம்பியுள்ளது. ரியோ மற்றும் மாளவிகா இடையேயான வேடிக்கை, சின்ன சின்ன நகைச்சுவை காட்சிகள், ஆகியவை கவர்ச்சிகரமாக உள்ளது.
படத்தின் இரண்டாம் பாதியில் நகைச்சுவை முதல் பாதியை விட கொஞ்சம் குறைவாகவே உள்ளது. ஆனால் உணர்ச்சி காட்சிகள் மிகவும் அழுத்தமாக, கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன எனவும் கூறியுள்ளனர்.
Listen News!