பிரபல நடிகை மிருணாளினி சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமாகி சினிமாவில் நுழைந்தவர். தற்போது தான் நடித்த ஒருசில திரைப்படங்களினால் பிரபலமாக பேசப்படுகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் எனக்கு அப்படி நடிக்க பிடிக்கும், ஆனால் பேச தெரியாது" என்று தனது திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
நடிகை மிருணாளினி தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "சூப்பர் டீலக்ஸ்" படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா, எளிமி, ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், மதுரையில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை மிருணாளி இவ்வாறு பேசி இருந்தார்.
அவர் கூறுகையில் "பொங்கல் நேரத்தில் நான் மதுரை வந்ததே கிடையாது. இங்க ஊரே திருவிழா கோலமாக உள்ளது. எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மதுரை பொண்ணு மாதிரி பேச ஆசையாக உள்ளது. எனக்கு அவர்கள் பேசுவதுபோல் பேச தெரியாது. அது எனக்கு சரியாக வரவில்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாது.
வாய்ப்பு கிடைத்தால் அதை கற்றுக்கொண்டு நடிப்பேன். மதுரை பொண்ணு மாதிரி பேசியிட்டார் என்று சொன்னால் கூட போகும். அடுத்த படத்தில் படியான வாய்ப்பை தான் எதிர்பார்க்கிறேன்' என்று கூறியுள்ளார்.
Listen News!