• Jan 11 2025

இவர் தான் டிடியின் புதிய காதலனா? ரொம்ப இழுத்து சுத்துறாரே..! வைரல் வீடியோ

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் திரைப்பட ப்ரமோஷன் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

தமிழில் வெளியான விசில் படத்தின் மூலம் அறிமுகமான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, அதற்குப் பிறகு தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி, காபி வித் காதல் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார். 

_i_a

இதை தொடர்ந்து தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் இவர்களுடைய திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. அதன் பின்பு ஸ்ரீகாந்தை விவாகரத்து செய்து சிங்கிளாக வசித்து வருகின்றார் திவ்யதர்ஷினி.


சமீபத்தில் திவ்யதர்ஷினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் 10 ஆண்டுகளில் சுமார் 4 அறுவை சிகிச்சை செய்து உள்ளதாக மிகவும் உருக்கமாக பேசியிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதலாக பல கருத்துக்களை பகிர்ந்து இருந்தார்கள்.


இந்த நிலையில் திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நபர் ஒருவர் டிடி ஐ பிடித்து என்னை இழு இழு இழுவென இழுக்குதடி..என்ற பாடலுக்கு டிடியை இழுத்து சுற்றியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில்,  டிடியுடன் இருக்கும் அந்த நபர் யார்? இவர் தான் டிடி யின் புதிய காதலரா என பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement