• Jan 11 2025

ஷங்கரின் பிரமாண்டம் வசூலில் சரிந்ததா? ராம் சரணின் "கேம் சேஞ்சர்" முதல் நாள் வசூல்!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சமே இருக்காது. வெளியான இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் முதல் நாள் வசூல் குறித்து பார்ப்போம்.


கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடிகர் ராம்சரனுக்கு வைத்த மாஸ் காட்சிகள்,அதில் இடம் பெற்ற பாடல் காட்சிகள் என அனைத்திலும் ஷங்கர் குறையாமல் கொடுத்திருக்கிறார். ராம்சரணை கொண்டாடும் அவரது ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் ரிலீசுக்காக காத்திருந்தார்கள். இந்நிலையில் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தானது.


இந்த திரைப்படம் 450 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம். எதிர்பார்த்த அளவுக்கு விமர்சனத்தை பெறவில்லை என்றாலும் ஓரளவு கலவையான விமர்சனத்தினை சந்தித்துள்ளது. மற்றபடி ரசிகர்கள் ஷங்கரை கொண்டாடி வருகிறார்கள்.


இந்நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் இப்படம் ரூ 51.25 கோடியை வசூல் செய்துள்ளது. தெலுங்கு மொழியில் ரூ. 42 கோடி, மேலும், உலகம் முழுவதும் படம் ரூ.90 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் இதைவிட இன்னும் வசூலில் வேட்டையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement