நடிகர் விஜய்யின் இறுதி திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரையுலகின் பல முக்கிய பிரபலங்களும், உலகம் முழுவதும் இருந்து வந்த ரசிகர்களும் கலந்து கொண்டு விழாவை வெற்றிகரமாக்கினர்.

‘ஜனநாயகன்’ படம் விஜயின் இறுதி சினிமா பயணம் என்பதால், இந்த விழா ரசிகர்களுக்கு மிகுந்த உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது. விஜயின் திரையுலகப் பயணத்தை கொண்டாடும் விதமாக மேடையில் பலரும் உரையாற்றினர். படத்தின் பாடல்கள், பின்னணி இசை, காட்சிகள் ஆகியவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகைகள் மற்றும் இயக்குநர் எனப் பலரும் பேசினர். அந்த வகையில் பாடலாசிரியர் விவேக் பேசிய உரை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விழா மேடையில் பேசிய பாடலாசிரியர் விவேக், ‘ஜனநாயகன்’ படத்தின் பாடல்கள் உருவான விதம் குறித்து பேசினார். அதன்போது அவர், “ஜனநாயகன் பாடல்கள் அனைத்தையும் நான் அல்லு அர்ஜூன் – அட்லீ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோதே எழுதினேன். என்னுடைய வேலையை புரிந்து கொண்டு எனக்கு முழு சுதந்திரம் கொடுத்ததற்கு நன்றி. நான் பாடல்கள் மூலம் விஜய்யை Elevate செய்யவில்லை. அவரே Elevation தான்.!” என்று கூறியிருந்தார்.
இந்த வார்த்தைகள் மேடையில் இருந்தவர்களையும், ரசிகர்களையும் பெரிதும் உற்சாகப்படுத்தியது. குறிப்பாக “அவரே Elevation தான்” என்ற விவேக்கின் வரிகள் விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
Listen News!