நடிகரும், தேமுதிக தலைவர் ஆக இருந்து அண்மையில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் விஜயகாந்த் காலமானார்.
இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று அதிகாலை முதல் தேமுதிக தொண்டர்கள், விஜயகாந்தின் ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் மரியாதை செலுத்தி வருகின்றார்கள்.

அந்த வகையில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் தமிழிசை செளந்திரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!