• Jan 18 2025

நிச்சயமா சொல்லுறேன் இவங்க தான் டைட்டில் வின்னர்... 2,3 பேர் தான் உண்மையா இருக்காங்க... பலச பேச விருப்பமில்லை sorry பிரதீப் தம்பி... cool suresh

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றிய கூல் சுரேஷ் அவர்கள் தற்போது பிக் போஸ் வீட்டில் இருப்பவர்கள் பற்றி சுவாரஷ்யமான தகவல்களை கூறியுள்ளார்.


என்னோட குடும்பத்துக்காகத்தான் பிக் பாஸ் விட்டு வந்தன் அத்தவகையில் சந்தோசம் தான். பிக் பாஸ் வீட்டுல உண்மையா இருக்குறது 2.3 பேர் தான் அதுல விஷ்ணு உண்மையிலே ஹீரோதான், உண்மையபேசுவான், தப்பு நடந்தா தட்டி கேட்ப்பான், அடுத்து தினேஷ் அவனும் அப்படித்தான் தன் மேல தப்பு வந்துர கூடாதுனு கவனமா இருப்பான்,  மற்றது மணி அவன் தான் உண்டு தான் வேல உண்டுன்னு உள்ளவன், சும்மா வம்புக்கு போகமாட்டான் வந்த வம்ப விடமாட்டான் மத்தவங்க எல்லாரும் பொய்க்குத்தான். 


 பிக் பாஸ் வீட்டுக்குள்ள ஸ்ட்ரோக் போட்டியாளர் அப்டினா விஷ்ணு, மணி அர்ச்சனா, தினேஷ், விசித்ரா இவங்க எல்லோரும் இருந்தாலும் மக்கள் கைலத்தன் இருக்கு. நீங்க யாரை எதிர் பாக்குறீங்களா அவங்க இல்லாம வேற ஒருத்தர்தான் கப் அடிப்பாங்க.


பிக் பாஸ் வீட்டுல இருக்கணும்னா பொறுமை வேணும், சகிப்பு தன்மை வேணும். இன்னும் பிக் பாஸ் விட்டு வெளிய போனவங்க உடுப்பு கூட காயுது, அங்க அங்க உடுப்பு அப்படியே இருக்கும் எல்லாம் சமாளிச்சு இருக்கணும். 


கமல் சார் சொன்னாரு நீங்க நல்லா விளையாடி இருந்தா நானே உங்க கைய தூக்கி இருப்பன்னு ஆனா நான் இப்ப வெளிய வந்துட்டேன். இனி டைட்டில் அடிக்கிறது தினேஷ், அர்ச்சனா, மணி, விஷ்ணு, விசித்ரா இவங்கள யாராவது இருக்கலாம். ஆனா பிரதீப் எலிமினேட் ஆகி போக இல்லனா அவன் தான் டைட்டில் வின்னர் என்று தான் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.   

Advertisement

Advertisement