• Apr 22 2025

என்னால் முடிந்ததை செய்கிறேன்: திடீரென தேர்தல் பிரச்சாரம் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்..

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் விருதுகளை வாங்கி சாதிக்கும் கலைஞர்களுக்கு மத்தியில் தனது இசைத்திறமையால் ஆஸ்கார் விருதை வென்ற இசையமைப்பாளர் AR ரகுமான் ஆவார். பொதுவாகவே சமூக விடயங்களில் கருத்து தெரிவிப்பதில் ஆர்வம் காட்டாத இவறது X தள பதிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.


தற்போது இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகின்றது. குறித்த தேர்தலில் போட்டியிடும் பல கட்சிகளுக்கு பல தரப்பு மக்கள் வாக்களிக்கின்றனர் ஆனால்  எவருக்கும் வாக்களிக்காமல் அதை தவிர்ப்பவர்களும் உள்ளனர். இவர்ளுக்கு விழிப்புணர்வு வழங்கும் படியான பதிவொன்றை போட்டுள்ளார் AR ரகுமான்.


அந்த பதிவில் "வாக்களிக்கும் உரிமை ஒரு குடிமகனின் மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகும்! இந்த 2024 லோக்சபா தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற இளைஞர்கள் சாதனை படைக்கும். எனவே, அனைத்து மக்களும், குறிப்பாக இளைஞர்களும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று, உலகம் கண்டிராத மிகப்பெரிய ஜனநாயக விழாவைக் கொண்டாடும் பணியில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்! நான் வாழ்த்துகிறேன் " I . I . M . U . N "அதன் "MY FIRST VOTE " பிரச்சாரத்தில் வாக்களிப்பதன் அவசியத்தை அதிகரிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement