சமூக வலைத்தளங்களில் தற்போது ஹஸ்கி வகை நாயின் செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் உருவாக்கப்பட்ட 'போக்கி டான்ஸ்' வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், தமிழ் படமான 'வெடி'யில் வரும் "இச் இச்" பாடலின் பின்னணியில், ஹஸ்கி நாய் துள்ளித் துள்ளி புதிய டான்ஸ் மூவ்ஸ் காட்டும் காட்சி இடம்பெறுகிறது.
இந்த AI வகை வீடியோவில் நாயின் சுவாரஸ்ய நடனம் தெளிவாக சைபர் உலகத்தையே கட்டிப்போட்டுள்ளது. பல நிறுவங்களும், பிரபலங்களும் இதே பாணியை ரீல்ஸ், மீம்ஸ், ட்ரெண்ட் வீடியோக்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்திய மொழிகளில் பலரும் இதற்க்கான பண்ணப்பட்ட வீடியோக்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதில் சுவாரசியம் என்னவென்றால், இந்த டான்ஸ் வீடியோவைத் தயாரித்தவர் மற்றும் நேரடியாக இருந்த சொந்தக்காரர் குறித்து தெளிவான தகவல் இல்லை.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் "Pookie டான்ஸ்" என்ற க்யூட்டான நாயின் நடன வீடியோவின் உண்மையான சொந்தக்காரர் விஜய் ஆண்டனி தான் என்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்.
அதாவது, 'மார்க்கன்' படத்தின் ரீல்ஸ் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோவில், 'போக்கி டான்ஸ்' உருவானதற்கான காரணம் விஜய் ஆண்டனி தான் என்று வீடியோவுடன் குறிப்பிட்டுள்ளனர்.
இதை பார்த்த ரசிகர்கள், "உண்மையாகவே இதற்கு விஜய் ஆண்டனி தான் சொந்தக்காரரா?" என்றும், இதே இளையராஜாவாக இருந்தால் கோர்ட்டில் கேஸ் போட்டு இருப்பார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Listen News!