விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசனை அடைந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிக ஆதரவு அளிப்பதால் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமாக தொடங்கி, 105 நாட்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதன்பின்னர் அவர் வெளியேறி, எட்டாவது சீசனில் இருந்து விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டு வருகிறார். கடந்த சீசனில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியதால் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்ததாக சிலர் குறிப்பிடுகின்றனர்.
இந்த சீசனில் திறமைக்குறைவான போட்டியாளர்களின் சேர்க்கை குறித்து ஆரம்பத்திலேயே சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால் விஜய் சேதுபதி இந்த சீசனில் இருந்து விலகுவதாகவும் தகவல்கள் பரவியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சீசனில் இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்ட நிகழ்ச்சி இம்முறை ஒரு வீடாக மாறி உள்ளது. இதேபோல், கடந்த சீசனில் 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே சென்றனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, ஒன்பதாவது சீசனில் தான் குளியலறையிலும் கேமராக்கள் பூட்டப்பட்டுள்ளன. அந்த வீடியோக்களில் அரோரா குளித்து வெளியே வரும்போது உள்ளே துஷார் இருப்பதும், ரம்யா மற்றும் சுபி ஆகியோர் குளிக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இது நிகழ்ச்சியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Listen News!