• Apr 13 2024

ரம்பா CANADA மருமகள் ஆனது எப்படி? சினிமாவில் டூப் போட்டவருக்கு இப்படி ஒரு வாழ்வா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சினிமாவில் காமெடி கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்றவர் பயில்வான் ரங்கநாதன். இவர் தற்போது யூடியூப் பிரபலமாக வலம் வருகிறார்.

இந்த நிலையில், ரம்பா கவர்ச்சி நடிகை ஆனது எப்படி? அவர் கனடா மருமகள் ஆனது எப்படி என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். அதன்படி அவர் கூறுகையில், 

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் மேடைகளில் இருந்து நடித்து வந்தவர்கள், டான்ஸ் குரூப்ல நடனமாடும் பெண்கள் நடிகைகளானதும், அதற்கு பிறகு டூப் போட வந்த நடிகைகளும் கதாநாயகிகளாக மாறினார்கள்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் ரம்பா என்கிற விஜயலட்சுமி என்கிற அமிர்தா. அவர் கனவில் கூட  நினைத்து பார்த்திருக்க மாட்டார். சினிமாவில் இப்படி நடிப்போம் என்று..


ஆரம்பத்தில் சத்யா மூவிஸ் படத்தின் நிறுவுனர், தயாரிப்பாளர் ஆர். எம் வீரப்பனுடைய மகன் தமிழழகன் முதன் முதலாக ஒரு சொந்த படத்தை இயக்கினார்.

அந்த படத்தின் பெயர் 'நிலா பெண்ணே' தன்னுடைய கனவுகளை எல்லாம் அந்த படத்தில் காட்சிகளாக மாற்றினார். அந்த படம் 80 சதவீதம் முடிந்த நிலையிலே, அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த திவ்யபாரதி மரணம் அடைந்தார்.  

இதையடுத்து அவரைப் போலவே, ஒரு பெண்ணைத் தேடினார். அதற்கு  விஜயவாடாவை சேர்ந்த ரம்பா எனும் அமிர்தா ஓரளவுக்கு செட் ஆனார்.

இவ்வாறு திவ்யபாரதிக்கு பதிலாக தான் நடிக்க வந்தார் ரம்பா. அதற்கு பிறகு தெலுங்கு, மலையாளம் என்று நடிச்சார்.


முதல் முதலில் தமிழில் அவர் கதாநாயகியாக நடித்த படம் தான் உழவன் மகன்.

அதை தொடர்ந்து, சுந்தர் சி எழுதி இயக்கிய 'உள்ளத்தை அள்ளித்தா' என்ற படத்தில் ரம்பா கதாநாயகியாக நடித்தார். அவரின் தொடை அழகைக் காட்டி மிகவும் கவர்ச்சியாக காட்டினார் சுந்தர். சுந்தர் சியை வெற்றி படமாக்கிய படமும் உள்ளத்தை அளித்ததா தான்.

இதை அடுத்து நிறைய படங்களில் நடித்த ரம்பா, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று சக்கை போடு போட்டார்.

அவருடைய சிரிப்பும் தொடையழகும் பின்புற அழகும் மிக அழகாக இருந்ததால் ரசிகர்கள் அவரை கனவுக்கு கன்னியாக ஏற்றுக் கொண்டார்கள்.

எப்போதுமே ஒரு நடிகனுக்கு, நடிகைக்கு ஏழரை சனி எப்ப வரும்னா, நிறைய பணம் சேர்ந்து .. நம்மை வைத்து பிறர் நிறைய சம்பாதிக்கிறார்களே நாம ஏன் அந்த படத்தை தயாரிக்க கூடாது என்ற எண்ணத்தில் தான். இவ்வாறு தான் அவருக்கும் ஏழரை சனி பிடித்தது.


அதுபோல் அவர் சொந்த செலவில் தயாரித்த படத்தின் பெயர் 'த்ரீ  ரோசஸ்'  இந்த படத்துல ரம்பா, ஜோதிகா, லைலா மூவரும் கதாநாயகிகள். கவர்ச்சியும் காட்டி நடித்தார்கள். ஆனால் எடுபடவில்லை.

அதன் பிறகு அந்த சோகத்தில் இருந்து மீள 'குயிக் கன் முருகன்' என்ற படத்தில் நடித்தார். அது சூப்பர் ஹிட்டானது.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று அத்தனை மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட படம். ரம்பா நடித்த படங்களிலேயே அவருடைய நடிப்பு திறமைக்கு கிடைத்த படம் தான் குயிக் கன் முருகன். அத்துடன் சினிமாவில் இருந்து விலகினார்.

இதை அடுத்து, கனடா நாட்டைச் சேர்ந்த இந்திரகுமார் பரதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


அவர் இலங்கை போரின் போது அங்கிருந்து தப்பி கனடாவுக்கு போய் கடினமாக உழைத்து கோடீஷ்வரர் ஆனார். அப்பத்தான் ரம்பாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன சில மாதங்களிலேயே ரம்பாவுக்கும் இந்திரகுமாருக்கும் விரிசல் ஏற்பட்டது.

ரம்பா மீண்டும் இந்தியா வர, அவரை சமாதானம் செய்ய நடிகைகள், தயாரிப்பாளர் எல்லாரும் அட்வைஸ் பண்ணினார்கள்.

அதாவது, அவர் ஒரு கோடீஸ்வரர், உன்ன நல்லா வச்சு காப்பாத்துவார், என்று.. இந்திரகுமார் பரதனும் ரம்பாவை சமாதானம் செய்து அவரை மூன்று குழந்தைகளுக்கு தாயாக்கினார். 

ஆனாலும், முக்கியமான விஷயம் எப்போதுமே தமிழ் ரசிகர்கள்  ரம்பாவை கவர்ச்சி நடிகையாக தான் பார்ப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement