பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் துஷார் பிரதானமாக காணப்பட்டார். ஆரம்பத்தில் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் நாளடைவில் அரோராவுடன் இவர் சேர்ந்து நேரத்தை வீணாக்கி தனது பெயரையும் கெடுத்துக் கொண்டார்.
கடந்த வாரம் இறுதியாக நடைபெற்ற எவிக்ஷனில் துஷார் வெளியேறினார். அதன்பின்பு பிரவீன் வெளியேறி இருந்தார். ஆனாலும் பிரவீனின் எவிக்ஷன் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன துஷார் கொடுத்த பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது. அதன்படி அதில் அவர் கூறுகையில், நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற விஷயம் பாதி பெயருக்கு தெரியாது. ஆனால் அதனை சொல்லிவிட்டு சென்றிருக்கலாம் என்று தோன்றியது. என்ன மாதிரி ஒரு பையன உள்ள வச்சு அழகு பார்த்தது, சந்தோஷம். இதனை என் வாழ்க்கையில மறக்கவே முடியாது.

இப்போது என்னை பார்த்தவர்கள் என்னுடன் செல்பி எடுத்து மகிழ்கின்றார்கள். பிக் பாஸ் எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்தது. மேலும் பிக் பாஸ் வீட்டில் உள்ள எல்லாருமே ஒரு குடும்பத்தைப் போலத்தான் இருந்தார்கள். அவ்வளவு நெருக்கமாகி விட்டார்கள்.
அந்த நேரத்தில், அரோரா பற்றி கேட்க, எல்லாருக்கும் ஒருத்தர் இருப்பது போல எனக்கும் அரோரா இருந்தார். நான் நிறைய டைம் பலவீனமாக இருந்த போது அவர்தான் என்னை தட்டிக் கொடுத்தார். எனக்கு கொஞ்சம் அவர் ஸ்பெஷல் தான். என்னை நிறைய இடங்களில் அவர் ஊக்குவித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
Listen News!