தெய்வத்திருமகள் திரைப்படத்தில் நடிகர் விக்ரமின் மகளாக நடித்து பிரபலமானவர் சாரா அர்ஜுன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது இவரா அவர் என நினைக்கும் அளவுக்கு மிக அழகாக மாறிவிட்டார்.
இவர் பிரபல நடிகர் ராஜ் அர்ஜுனின் மகள் ஆனார். தெய்வத்திருமகள் படத்தை தொடர்ந்து சைவம் படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதன்பின் சில ஆண்டுகள் கழித்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சிறு வயது ஆதித்த கரிகாலனின் காதலியாக நந்தினியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டார். இதற்காக அவருக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் அந்த கூட்டணி ஒரு காதல் கதையை மையமாக வைத்து இணையவுள்ளதாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த நடிகர் சந்தோஷ் மற்றும் நந்தினியாக நடித்த சாரா அர்ஜுன் ஆகிய இருவரும் இணைத்து புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார்கள்.
குறித்த படம் "Love Romantic Backdrop Story" ஆக இருக்கும் என கூறப்படுகிறது.
Listen News!