தமிழ் சினிமாவில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தனுசுடன் அறிமுகமானவர் அபிநய். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தாஸ், சிங்கார சென்னை போன்ற ஒரு சில படங்களில் நடித்தார். இவரால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியவில்லை.
தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் பணியாற்றியுள்ளார் அபிநய். தனக்கு பெரிதளவில் வெற்றி கிடைக்காவிட்டாலும் மனம் தளராமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார். சினிமாவில் கிடைத்த அத்தனை வாய்ப்பையும் பயன்படுத்தி உள்ளார். சில படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
ஒரு கட்டத்தில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்ந்து போனார். அவருக்கு கல்லீரல் தொடர்பான நோயும் வந்துவிட்டது. இதனால் சினிமாவில் இருந்து மொத்தமாகவே விலகி காணாமல் போனார்.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு திடீரென ஆளே அடையாளம் தெரியாமல் போய் இருந்த நிலையில் அவருடைய வீடியோ ஒன்று வெளியானது. அதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அதன் பின்பு பாலா நேரில் சென்று அவரை சந்தித்து அவருக்கு ஆறுதல் சொல்லி பண உதவியும் செய்தார்.
அதன் பின்பு ஒரு சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டியும் கொடுத்துள்ளார். ஒரு சில படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவருடைய உறவினர்கள் யாரும் வராத நிலையில் இறுதிச் சடங்கிற்கான மொத்த பொறுப்பையும் பாலா ஏற்றார்.
இந்த நிலையில் நடிகர் அபிநய் உடலுக்கு யார் கொல்லி வைப்பது என்ற வாக்குவாதமும் நடந்துள்ளதாம். ஏற்கனவே வாடகை வீட்டில் இருந்த அவருடைய உடலை பார்ப்பதற்கு வந்த நண்பர்களை தடுத்து, வீட்டுக்காரர் பிரச்சினை செய்துள்ளார்.
தற்போது அபிநய் உடலுக்கு யார் கொல்லி வைப்பது என்ற கேள்வியும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!